This entry is in the series 20100509_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


#

டிபன் பாக்ஸ், வாட்டர் பாட்டில்,
புத்தகங்கள் என
மகனைப் பள்ளிக்கு அனுப்ப
தயார் செய்து கொண்டிருந்தாள்
மனைவி.
மாத்திரைகள், பைல்,
கட்ட வேண்டிய பில்களுடன்
மறுபுறம் நான்.
ஆறு, பாலம், மலையென
திருப்பித் திருப்பி
சொல்லிக் கொண்டிருந்த
டோராவுடன் ஆடிக் கொண்டிருந்தான்
மகன்.

Series Navigation