This entry is in the series 20020623_Issue

எஸ். வைதேஹி.


கண் சொருகும் வேளை
விழித்தெழும்
மூளைக்குள் நாகம்.

சுற்றிப் பரவும்
காற்றில்
நான் எப்போதோ
விட்டு வைத்த
என் எச்சத்தின்
விஷம்.

கண்ணுக்குத்
தெரியா ரத்தம்
சுண்டும்
அட்டைப் பூச்சிகளின்
கருவறைக்குள்
மடங்கிப் போகும்
நெடு நாட்கள்.

முங்கி எழுந்து
நிலம் நோக்கையில்
தொலைந்து போயிருந்தது
நீருக்குள்
நான் ஒளித்து வைத்திருந்த
உன் மூச்சு.
*************************************
svaidehi@hotmail.com

Series Navigation