This entry is in the series 20061214_Issue

கரு.திருவரசு


எடுப்பு

சின்னண்ணே பெரியண்ணே சொன்னாக் கேட்டுக்கோ

ஒண்ணொன்னாப் புதுத்தாளம் மாத்திப் போட்டுக்கோ

தொடுப்பு

சின்னக் சின்னக் கவுண்டர் எல்லாம்

பிஞ்சு போகும் பாதை அண்ணே

பஞ்சாகப் பறக்காதே பட்டுன்னு ஒட்டிக்க வா

கண்ணிகள்

அண்ணன் தம்பி மாமா மச்சான்

எல்லாம் இங்கே ஒண்ணுக் கொண்ணு

கோனார் எல்லாம் வேணாம் அண்ணே

கோடு போட்டு வேலி போட்டுக்

கொடுமை செய்யாதே

அன்பு வச்சா வம்பு இல்லே

கம்பு கட்சி எல்லாம் தொல்லை

தேவர் இங்கே தேவை இல்லே

கூறு போட்டு வேறு வேறு

குழப்பம் பண்ணாதே


thiru36@streamyx.com

Series Navigation