This entry is in the series 20110522_Issue

இளங்கோ


*
நீங்கள்
அப்படி ஒப்புக் கொள்ளும்போதே
கொஞ்சம் மரணிக்கிறீர்கள்..

ஆட்படும் கண நேர
தலையசைப்பில் நீர்த்துப் போகிறது
இருப்பதாக நம்பப்படும் வைராக்கியம்.

தேங்கியக் குட்டைக்குள்ளிருந்து
நீந்திப் பழகிய வார்த்தைகள்
ஒவ்வொன்றும் சிறகுகள் முளைத்து
கூரைக்கு மேலே பறத்தலை நிகழ்த்துகின்றன..

ரகசியமென இரவுகளில் கவிழ்கின்றது
முன்னெப்போதும் இளமையென
கை விடப்பட்ட சந்தர்ப்பங்கள்..

*****
–இளங்கோ

Series Navigation