This entry is in the series 20020909_Issue

ஆனந்தன்


ஏய் பெண்ணே…
என் நட்பின் இனியவளே…

முதலில் சந்தித்த – அந்த
முதல் நாள்
முத்தாக நினைவிருக்கிறது.

நீண்ட நேரம்
நிறைய பேசினோம்
நம் கடந்த கால
நிகழ்வுகளை, நிஜங்களை
நினைத்துப் பார்த்தோம்..

எதிர்கால கனவுகளை
ஏக்கத்தோடு
எண்ணிப் பார்த்தோம்…

வாழ்வின் கோட்களை
வாதிட்டோம்.

நான் பேசியவைக்கு – எல்லாம்
நீ செவிசாய்த்தாய்..
உன் பேச்சிற்கு நானும்.

நாம் பேசிய நேரங்களில்,

மேற்கில் சந்தித்த
கதிரவனும், சந்திரனும்
மீண்டும் ஒரு முறை
கிழக்கில் சந்தித்த
நாட்கள் எத்தனை…

மேகம் கரைந்து
கடலில் வீழ்ந்த
மழைத் துளி
முத்தாகி இருக்கும்,

தேய் பிறை இரவுகள்
வளர்ந்து
முழு நிலவாகி இருக்கும்,

விதைக் கொடியாகி
கொடி பூப் பூத்து
பூ காயாகி
கனிந்திருக்கும்….

வாடிய பூக்களைப் பார்த்து
வாடியிருக்கிறாய் நீ
நம் நட்பு வாடுவதை
உணரவில்லையோ நீ ?

நம்மை பிரித்த தூரம்
நம் நட்பையும் பிரித்துவிடுமோ ?

என் நட்பே…
ஒரு கடிதம் எழுதி
நம் நட்பை உயிர்பாய்.

k_anandan@yahoo.com

Series Navigation