This entry is in the series 20080410_Issue

ராம செல்வி


எனது மூன்று வயது மகள்

என்னோடு பேச மறுக்கிறாள்

நான் வம்படியாக தூக்கினாலும்

விலகிகொண்டு வெறுப்பாய் பார்கிறாள்

அம்மாவே உலகம் என்று ஆகிக்கிடந்தவள்

சுவரின் மூலையில் சோர்ந்து கிடக்கிறாள்

என் இரண்டாவது மகள் பிறந்து

இரண்டு வாரம்தானே ஆகிறது,

என்ன செய்ய,

சின்னத்தங்கையின் சிறு விரல் தொட்டு

சிரித்துக்கொள்கிறாள்

நான் தொட்டு தூக்கும்போது

நகர்ந்து கொள்கிறாள்.

தாய்பால் கொடுக்கும்போது

தள்ளி நின்று

தான் யாரோவாகிப் போனதாய்

மெல்ல என் தலையனையில் தலைவைத்து

படுத்துக்கொள்கிறாள்

என்ன செய்வது

என் கண்களின் கசியும் கண்ணீர்துளிகன்

அவள் காயம் ஆற்றுமா?


rm_slv@yahoo.com

Series Navigation