This entry is in the series 20081218_Issue

வே பிச்சுமணி


பிரபஞ்சத்தில் எத்தனையோ
வீண்மீன்கள் வெடித்து அழியும்
காதல் தோல்விகள் போல்- எத்தனையோ
வீண்மீன்கள் புதிதாய் தோன்றும்
காதல் வெற்றிகள் போல

கருத்த உடம்பில் பல்லை தவிர வேறு
வெள்ளையில்லையென காதல் மறுத்த போது
வெடித்த வீண்மீனின் கருந்துளை போன்று
பிரபஞ்சத்தின் மூலையில் என்காதல் மரித்தது

எரிதமாய் வந்த கடிதத்தை அழிப்பது போன்று
விளையாட்டாய் சொன்னதை விதி என்று
பூமிக்கு ஒரு முகம் காட்டும் நிலா போன்று
மறுமுகம் காட்டாது காதல் மறந்தாரென்று
என் தங்கையிடம் நீ சொன்ன போது
என் இதயபிரபஞ்சம் மீண்டும் வெடித்தது
சிதறியசில்லுகளில் உன்முகங்கள்


vpitchumani@yahoo.co.in

Series Navigation