This entry is in the series 20091119_Issue

மகேந்திரன் நவமணி, மலேசியா



இதுவரை
எனக்குத் தோன்றவில்லை…
ஆசை ஆசையாய்
குழந்தைக்கு ஏதேனும்
வாங்கி செல்லும்
தருணங்களில் எல்லாம்
பக்கத்து வீட்டு வாசலில்
நிழலாடும்
ஏழைச்சிறுமியின் முகம் பற்றி
இதுவரை
எனக்கு எதுவும் தோன்றவில்லை…
இன்றாவது
தவறாமல் ஏதேனும்
வாங்கி செல்ல வேண்டும்
அவளுக்கும் ஒன்று…!

Series Navigation