This entry is in the series 20100227_Issue

செல்வராஜ் ஜெகதீசன்


இன்னுமொரு

அழைப்பாய்

இருக்கலாம்

இது உங்களுக்கு.

அகாலத்தில் நிகழ்ந்த

அந்த அழைப்பில்

அதுவரையான என்

அமைதிப் பிம்பத்தை

மனையாள் மற்றும்

மற்ற பிறர் முன்

சற்றே

மாற்றிப் போட்டதில்

என் நினைவில்

என்றுமினி
நீங்காதொரு

அழைப்பே.

இனியாவது

அகாலத்தில் நிகழாமல்
பார்த்துக் கொ(ல்லு)ள்ளுங்கள்

நண்பர்களே!

கடன் அட்டை

குறித்த உங்கள்

கனிவான
அழைப்புகளை.

SJEGADHE@tebodinme.ae

Series Navigation